பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து செய்யாற்றில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
செய்யாறு நகர அதிமுக சார்பில் அதிமுக பொதுச் செயலாளரை தரம் தாழ்த்தி பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்தனர். மாவட்டச் செயலாளர் தூசி மோகன் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து அண்ணாமலை நேற்று பேசிய நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவரது உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி லோக்சபா தேர்தலுக்கு முன்பாக உடைந்தது. அண்ணாமலை, அதிமுக தலைவர்களை தரக்குறைவாக பேசியதாலேயே கூட்டணி முறிந்ததாக அதிமுகவினர் கூறிவந்தனர். லோக்சபா தேர்தல் முடிந்த பிறகும் அதிமுக பாஜக இடையே அவ்வபோது வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தரம் தாழ்த்தி பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகிய சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் செய்யாறு அண்ணா சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைதொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரம் தாழ்த்தி பேசியதை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கழகப் பொதுச் செயலாளரை அவதூறாக பேசிய அண்ணாமலை ஒழிக என்று கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையில், நகர அவைத் தலைவர் ஜனார்த்தனன், மாநில எம்ஜிஆர்மன்ற துணை செயலாளர் ஜாகிர் உசேன், ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரன், அரங்கநாதன், துரை, திருமூலன், ராமநாதன், மாவட்ட இணைசெயலாளர் விமலா மகேந்திரன் மாவட்ட பொருளாளர் ஆலத்தூர் சுப்பராயன்,மாவட்ட கழக நிர்வாகிகள் அருணகிரி ,ரவிச்சந்திரன், கோபால், கோவிந்தராஜ், பாஸ்கர் ரெட்டியார்,அருண் , கன்னியப்பன்,ஒன்றிய அவைத் தலைவர்கள், செபாஸ்டின் துரை, சேகர், சுதாகர், பிரகாஷ், மகாதேவன், தணிகாசலம் எழில் ,சுரேஷ் குமார் ராஜ், வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.