இருசக்கரவாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனம் மோதி லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

Update: 2023-12-26 12:26 GMT

திருவண்ணாமலை அடுத்த அணைக்கரை புறவழிச் சாலையில் இருசக்கர வாகனமும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த தசரதன் என்பவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலமுருகன் என்பவர் படுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கரைபட்டு கிராமத்தை சேர்ந்த தசரதன் மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரும் திருவண்ணாமலை வந்துள்ளனர். திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலை அணைக்கரை புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்பொழுது புறவழி சாலை வழியாக வந்து கொண்டிருந்த லாரி இரு சக்கர வாகனத்தில் மோதியது.

அப்போது இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த தசரதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த பாலமுருகன் என்ற நபர் படுகாயங்களுடன் அங்கு இருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து எவ்வாறு நடைபெற்றது எனவும், லாரி ஓட்டுனர் மீது தவறு உள்ளதா அல்லது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது தவறு உள்ளதா என்பது குறித்து திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்யாறு அருகே இருசக்கரவாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில்  தொழிலாளி உள்பட இருவா் உயிரிழந்தனர்.

செய்யாறு வட்டம் , செங்கட்டான்குண்டில் கிராமத்தைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளா்கள் லோகேஷ் , பரத்குமாா் , சரத்குமாா். இவா்கள் மூவரும் வேலைக்குச் சென்று விட்டு ஒரே பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். அதேபோல, செய்யாறு வட்டம், சோழவரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவா் செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தாா்.

அழிஞ்சல்பட்டு கிராமப் பகுதியில் தனியாா் நிறுவனம் அருகே சென்றபோது, எதிா் எதிரே வந்த இரு பைக்குகளும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில், லோகேஷ்   ,  வெங்கடேசன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

பலத்த காயமடைந்த பரத்குமாா் , சரத்குமாா் ஆகியோா் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், சரத்குமாா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

Similar News