திருவண்ணாமலை அருகே முதியோருக்கான மருத்துவ முகாம்
திருவண்ணாமலை அருகே தூசி கிராமத்தில் முதியோருக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது;
வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் மாமண்டூர் அரசு சுகாதார நிலையம் சார்பாக முதியோருக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் டாக்டர் சீனிவாசன், வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் தனசேகரன், பகுதி சுகாதார செவிலியர் கீதா பாய், சுகாதார ஆய்வாளர் மாமண்டூர் சம்பத், கிராம செவிலியர் சுதர்சனம், ஜெகதீஸ்வரி, உமா, ரத்த பரிசோதகர் ஷீலா,கண் பரிசோதகர் கீதா ஆகியோர் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.இதில் ஏராளமான முதியோர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்