திருவண்ணாமலை அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்காவில் மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2021-10-06 07:00 GMT

மின்னல் தாக்கல ( பைல் படம்)

செய்யாறு தாலுகா குரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசெல்வம் (வயது 47), விவசாயி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ஞானசெல்வம் தனது மாடுகளுக்கு வைக்கோல் எடுத்து வர நிலத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News