தூய்மைப் பணிக்காக மின்கலன் வண்டிகள் வழங்கல்- செய்யாறு பகுதி செய்திகள்

செய்யாற்றை அடுத்த வெம்பாக்கம் ஒன்றியத்தில் தூய்மைப் பணிக்காக 34 கிராமங்களுக்கு 48 மின்கலன் வண்டிகள் வழங்கப்பட்டன.

Update: 2023-03-07 14:29 GMT

தூய்மை பணிக்கான வண்டிகளை வழங்கிய செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட வெம்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்விட்ச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ், தூய்மைப் பணிக்காக 34 கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் 48 மின்கலம் வண்டிகளை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பங்கேற்று 34 ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ராஜி, வட்டார வளர்ச்சி அலுவலர் மயில்வாகனன், மாவட்ட ஊராட்சி தலைவர் பார்வதி சீனிவாசன், மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ,ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதியதாக திரவுபதி அம்மன் கோவில் ரூ.2 கோடியில் கட்ட பூமி பூஜை விழா

செய்யாறு அருகே உள்ள அருகாவூர் கிராமத்தில் புதியதாக திரவுபதி அம்மன் கோவில் ரூ.2 கோடியில் கட்ட பூமி பூஜை விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஜோதி பங்கேற்று கட்டிடம் கட்ட பூமி பூஜையை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது 4 வயது குழந்தையை கடித்து குதறிய வெறிநாய்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருணகிரிசத்திரம் பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளி தினகரன் இந்துமதி தம்பதினயினரின் 4வயது ஆண் குழந்தை ஹோம்நாத் தெருவில் சக குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது தெருவில் சுற்றி திரிந்த வெறிநாய் திடிரென 4 குழந்தைகளையும் கடிக்க முயன்றது. அப்போது குழந்தைகள் அலறல் சத்தத்துடன் ஓட்டம் பிடித்தனர். இதில் மற்ற குழந்தைகளும் லேசான காயத்துடன் தப்பினார்கள்.

4 வயது குழந்தை ஹோம்நாத் தரையில் விழுந்ததால் வெறிநாய் தொடை கை கால் உள்ளிட்ட பகுதிகளில் கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த குழந்தை ஹோம்நாத் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றான்.

நகராட்சியில் வெறிநாய் குழந்தைகள் முதியவர்களை கடித்து குதறும் நிலைமை தொடர்கதையாக உள்ளது. இது சம்மந்தமாக நகராட்சி நிர்வாகம் வெறிநாய்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்து வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News