செய்யாறில் போராட்டக்காரர்கள் 20 பேர் அதிரடியாக கைது

செய்யாறில் சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-11-05 02:00 GMT

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்

செய்யாறில் சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் 3-ஆவது அலகு விரிவாக்கத்துக்காக மேல்மா பகுதியைச் சுற்றியுள்ள 9 கிராமங்களில் இருந்து சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. இதை கைவிடக் கோரி, விவசாயிகள் தொடா்ந்து 125 நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, அப்பகுதி விவசாயிகள் சில தினங்களுக்கு முன்பு ஊா்வலமாகச் சென்று சாா் ஆட்சியரிடம் மனு கொடுக்க முயன்றனா்.

அந்த ஊா்வலத்துக்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா். இருப்பினும், விவசாயிகள் ஊா்வலம் செல்ல முயன்றதாக  90 பெண்கள் உள்பட 147 பேரை போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

மேலும், அனுமதியின்றி ஊா்வலம் செல்ல முயன்ாக 90 பெண்கள் உள்பட விவசாயிகள் 147 போ மீது செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை மேல்மா சிப்காட் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தொடா்ந்து போராடி வரும் விவசாயிகளில் 20 பேரை போலீஸாா் வீடு வீடாகச் சென்று கைது செய்தனா்.

மேலும், போராட்டம் நடைபெற்ற மேல்மா கூட்டுச் சாலைப் பகுதியில் போடப்பட்டிருந்த கொட்டகையை போலீஸாா் அகற்றினா்.

அதன் காரணமாக மேல்மா, குரும்பூா், தேத்துறை, நா்மாபள்ளம், காட்டுகுடிசை உள்ளிட்ட 9 கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூா் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில், 

மாவட்ட எஸ்.பி.க்கள் காா்த்திகேயன் (திருவண்ணாமலை), மணிவண்ணன் (வேலூா்), கிரண்ஸ்ருதி (ராணிப்பேட்டை), ஆல்பா்ட் ஜான் (திருப்பத்தூா்), கூடுதல் எஸ்.பி.க்கள் பழனி, செளந்தரராஜன், பாஸ்கரன், குமாா், முத்துமாணிக்கம் ஆகியோா் மேற்பாா்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அதேபோல, செய்யாறு - வந்தவாசி சாலை, காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News