அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்

செங்கம் பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்

Update: 2021-06-19 14:21 GMT

செங்கம் பகுதியில்அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டனர். 

தற்போது 21-22 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள நடுத்தர மக்கள் அரசு பள்ளிகளை நாடி வருகின்றனர். தனியார் பள்ளிகளில் கட்டணம் மிக அதிகமாக வாங்குவதால் அரசுப்பள்ளிகளை நாடுவதாக குறிப்பிட்டனர்.

செங்கம் வட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் இலவச நோட்டு புத்தகங்கள், கணினி. மிதிவண்டி, மட்டுமல்லாது தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது.  மேலும்,  அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்கும் திறனும் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டனர்.

Tags:    

Similar News