ஆதி திராவிடர் நலத்துறை அரசினர் மாணவ மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்
பிற்படுத்தப்பட்டோர் அரசினர் மாணவர் மாணவியர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.;
மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்த ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், அவர்கள் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில் “ திட்டத்தின் கீழ் செங்கம், ஆதிதிராவிடர் நலத்துறை அரசினர் மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, உணவினை உண்டு தரம் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கீழ் செங்கம், ஆதிதிராவிடர் நலத்துறை அரசினர் மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவியர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்து, அவர்களின் தேவைகள் குறித்தும் , பிற்படுத்தப்பட்டோர் அரசினர் மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்கள், விடுதி காப்பாளர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், கண்ணமங்கலம் அருகேயுள்ள கொங்கரா பட்டு ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் வாசித்தல் திறன் குறித்து கேட்டறிந்து, குழந்தைகளின் வருகை விவரம், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை உண்டு பரிதோதித்தார்.
தொடர்ந்து, உலக தாய்ப்பால் வாரவிழா 2024 முன்னிட்டு தாய்ப்பால் வழங்குவதன் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதி மொழ யை வாசிக்க, தாய்மார்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும், உலக தாய்ப்பால் வாரவிழா -2024 முன்னிட்டு தாய்ப்பால் வழங்குவதன் அவசியம் குறித்து அறிவுறுத்தி, தாய்மார்களுக்கு உட்டசத்து மாவு பொட்டலங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள். இந்நிகழ்வில் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.