திருவண்ணாமலை: கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2022-05-10 06:15 GMT

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட முகாமில் கலந்து கொண்டவர்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில்,  தண்டராம்பட்டு வட்டாரம் கீழ்வணக்கம்பாடி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. வேளாண் துணை இயக்குநர்,  எஸ். ஏழுமலை, தலைமையில் வேளாண் உதவி இயக்குநர்  த.ராம் பிரபு,  முன்னிலையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாம்களில் பயிர்க்கடன் வழங்குதல், விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்குதல், பயிர் காப்பீடு குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமாக கூறப்பட்டது. மேலும் கால்நடைகள் நலன் பேண அந்தந்த துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் பற்றி  எடுத்து விளக்கமாக கூறப்பட்டது.

இந்த சிறப்புக் கூட்டத்தில்   வேளாண் அலுவலர், வேளாண் பொறியியல் துறை பொறியாளர், கால்நடை மருத்துவர்,பஞ்சாயத்து தலைவர் , துணை வேளாண் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்,  விவசாயிகள் , பொதுமக்கள் மற்றும் வேளாண் உதவி அலுவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News