ஆரணி புதுகாமூரில் உலக நன்மைக்காக பால்குட அபிஷேகம்

காமேட்டீஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காகவும், குடும்பம் நலம் பெற வேண்டியும் பால்குட ஊர்வலம் நடந்தது.

Update: 2022-04-17 11:52 GMT

உலக நன்மைக்காக பால்குட ஊர்வலம்  நடைபெற்றது.

ஆரணி புதுகாமூர் பெரியநாயகி சமேத புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் நடக்கவில்லை. தற்போது, உலக நன்மைக்காகவும், குடும்பம் நலம் பெற வேண்டியும் பால்குட ஊர்வலம் நடந்தது. 

ஆரணி பஸ் நிலையம் அருகே உள்ள அரியாத்தம்மன் கோவிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலை அடைந்தனர். அந்தப் பாலால் அனைத்துச் சாமிகளுக்கும் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அபிஷேகமும், மகா அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது.

அதைத்தொடர்ந்து ருத்ர யாக பூஜையும், மாலை சாமிக்கு திருக்கல்யாண வைபவமும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News