மின்சாரம் தாக்கி ஓய்வு பெற்ற நில அளவையர் உயிரிழப்பு

Retired surveyor killed electrocution;

Update: 2022-07-03 13:46 GMT

கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற நில அளவையர் கோவிந்தசாமி ( 68), .இவர் இன்று காலை வயலில் மாட்டுக்கு தேவையான தீவனப்பயிரை அறுக்கச் சென்றார். அப்போது அங்கு அறுந்து விழுந்து கிடந்த மின் வயரை மிதித்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் தாக்கியது.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கோவிந்தசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் போலீசில் கோவிந்தசாமியின் மகன் வினோத்குமார் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தரணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News