புகையிலை பொருட்கள் விற்பனை: கடை கடையாக அதிரடி சோதனை
ஆரணியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று காவல்துறையினர் கடை கடையாக சென்று அதிரடி சோதனை செய்தனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் கடந்த சில நாட்களாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், பான்மசாலா, குட்கா பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆரணி டவுன் போலீசார், கடை கடையாக சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் ஆரணி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் பெரிய கடை வீதி ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகள், மொத்த விற்பனை கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.