பெரணமல்லூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்
பெரணமல்லூரில் பழுதடைந்த பிடிஓ அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்;
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரில் பழுதடைந்த பிடிஓ அலுவலக கட்டிடத்திற்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அவனியாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் கோயில் தேரோடும் பாதை சரி படுத்துதல், கூட்டு ரோடு பகுதியில் நிழற்கூடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்