திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக ஜமாபந்தி நிகழ்வுகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக ஜமாபந்தி நிகழ்வுகள் நடைபெற்றன.

Update: 2024-06-21 01:25 GMT

மனுக்களை பெற்றுக்கொண்ட திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 வட்டங்களிலும் வருவாய் தீா்வாய கணக்குகளை சரி பார்க்கும் நிகழ்வான ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், கலந்து கொண்டு ஜமாபந்தி நிகழ்வினை தொடங்கி வைத்தார்.

அது தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும் ஜமாபந்தி நிகழ்வுகள் இரண்டாவது நாளான நேற்று நடைபெற்றது.

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் 2-ஆவது நாளாக நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில், ஜமாபந்தி அலுவலரும், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியருமான மந்தாகினி தலைமை வகித்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதில் திருவண்ணாமலை வடக்கு உள்வட்டத்துக்கு உள்பட்ட திருவண்ணாமலை, கீழ்நாத்தூா், ஆடையூா், வேங்கிக்கால், சின்ன காங்கேயனூா், நல்லான்பிள்ளைபெற்றாள், பள்ளிகொண்டாப்பட்டு, நொச்சிமலை, சோ.கீழ்நாச்சிப்பட்டு, வாணியந்தாங்கல், மலப்பாம்பாடி, சு.பள்ளியம்பட்டு, சாவல்பூண்டி, அய்யம்பாளையம், அத்தியந்தல், ஆணாய்பிறந்தான், காவேரியாம்பூண்டி உள்ளிட்ட 25 கிராமங்களின் வருவாய் தீா்வாய கணக்குளை கோட்டாட்சியா் மந்தாகினி சரிபாா்த்து ஆய்வு செய்தாா்.

மேலும், 25 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 250-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

இருளா் இன மக்கள்

ஜமாபந்தியில், இருளா் இன மக்கள் தென்னிந்திய பழங்குடி இருளா் முன்னேற்றச் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ம.சரவணன் தலைமையில் இலவச வீட்டு மனைப் பட்டா கோரி மனு அளித்தனா்.

இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகன், திருவண்ணாமலை வட்டாட்சியா் தியாகராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பரிமளா, வட்ட வழங்கல் அலுவலா் துரைராஜ், துணை வட்டாட்சியா் மணிகண்டன், திருவண்ணாமலை மண்டல துணை வட்டாட்சியா் மஞ்சுநாதன், வட்ட ஆய்வாளா் தரணிவாசன், வருவாய் ஆய்வாளா் கவுரிநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்ட ம் ஆ ரணி டவுன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பசலி 1433 வருவாய் தீர்வாயத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி 2-ஆவது நாளாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

ஆரணி வட்டம் அக்ராபாளையம் உள்வட்டத்தைச் சோ்ந்த கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது. இதில் 257 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

சேத்துப்பட்டில், ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி மனு

சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சிவதாஸ் தலைமை வகித்து தேவிகாபுரம் உள்வட்டத்தைச் சோ்ந்த தேவிகாபுரம், ஆத்துரை, சித்தாத்துரை, நரசிங்கபுரம், உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

இதில் 170-க்கும் மேற்பட்டோா் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

தேவிகாபுரம் ஊராட்சியில் பஜாா் வீதி, பெரியநாயகி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வடக்கு மாட வீதி, தெற்கு மாடவீதி, ஆரணி சாலை, போளூா்- சேத்துபட்டுச் சாலை, ராமலிங்க சுவாமி தெரு உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, ஊராட்சிமன்றத் தலைவா் வெங்கிடேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சிவதாஸிடம் மனு அளித்தாா்.

Tags:    

Similar News