சேத்துப்பட்டு பேரூராட்சியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி மருத்துவ முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் பொதுமக்களுக்கு 100% கொரோனா தடுப்பூசி அளிக்கும் வகையில் நடமாடும் கொரோனா தடுப்பூசி மருத்துவ முகாம் வாகனத்தை செய்யாறு உதவி ஆட்சியர் விஜயராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்சிக்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை, ரோட்டரி சங்கம் இணைந்து ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர், சேத்துப்பட்டு வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர், காவல் உதவி ஆய்வாளர், மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.