கண்ணமங்கலம் அருகே குழந்தைகளுக்கான தடகள ஓட்டப்பந்தயம்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடகளப்போட்டிகள் நடைபெற்றது;

Update: 2021-07-29 09:36 GMT

சந்தவாசல் பகுதியில் நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடகளப்போட்டிகளில் வென்றவர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் சந்தவாசல் பகுதியில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடகளப்போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் அங்குள்ள சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த இளைஞர்களும், சிறுவர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

இத்தடகள போட்டியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் 5000 மீட்டர், 1600 மீட்டர், 400 மீட்டர், 200 மீட்டர் போன்ற பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டனர். பல்வேறு வயதுடையவர்களுக்கும் தனித்தனிப் பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் 5000 மீட்டர் பிரிவில் கமல் முதலிடத்தையும், ரஞ்சித் இரண்டாமிடத்தையும் யுவராஜ் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு School Games Development Foundation மற்றும் Challenge Friends Club சார்பில் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்தனர்.

Tags:    

Similar News