காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஆரணி எம்பி அன்னதானம்
காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேத்துப்பட்டு ஊராட்சியில் ஆரணி எம்பி விஷ்ணுபிரசாத் அன்னதானம் வழங்கினார்;
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத், அவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு முகக்கவசம், இனிப்பு, அன்னதானம் ஆகியவற்றை வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட தலைவர் அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.