காய்கறி சந்தையில் தடுப்பூசி போடாமல் வியாபாரம் செய்தால் நடவடிக்கை: ஆரணி நகராட்சி
காய்கறி சந்தையில் தடுப்பூசி செலுத்தாமல் வியாபாரத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரணி நகராட்சி எச்சரித்துள்ளது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காய்கறி சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி முகாம் நடைபெற்றது. முகாமை கோட்டாட்சியர் கவிதா தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் ராஜா விஜய காமராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள், வட்ட மருத்துவ அலுவலர்கள், கலந்து கொண்டனர்.
இம்முகாமில் காய்கறி சந்தையில் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்களை கண்டுபிடித்து தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. மேலும் வியாபாரிகள் அனைவரும் அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தாமல் பணிகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.