ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு வார விழா
திருப்பூர் மாவட்டம் உடுமலையில், வன விலங்கு வார விழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு வார விழா நடைபெற்றது. துணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. துணை இயக்குனர் தேஜஸ்வி பேசுகையில், வனம் மற்றும் வன விலங்குகளை காப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த 1957 ம் ஆண்டு முதல் வன விலங்கு வார விழா, அக் முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது என்றார்.
உயிர்ச்சூழல் மண்டலத்தில் வனம், வன விலங்குகள், மனிதர்கள் என மூன்றும் பிரிக்க முடியாத ஒன்றாகும். இதில், ஒன்று இல்லை என்றாலும், மற்றவை அழிந்துவிடும். மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சிமலை என இரு மலைத்தொடர்களும் ஒருங்கே தமிழகம் அமைத்து இயற்கையாக உள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம், வனச்சரக அலுவலர்கள் தனபாலன், சுரேஷ், மகேஸ் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.