வன விலங்கு கணக்கெடுப்பு இன்று துவக்கம்
திருப்பூர் வனக்கோட்டத்தில் வன விலங்கு கணக்கெடுப்பு இன்று முதல் 8 நாட்களுக்கு நடக்கிறது.
திருப்பூர் வனக்கோட்டத்தில் இன்று முதல் 15 தேதி வரை 8 நாட்களுக்கு கோடை காலம் புலிகள் மற்றும் இதர மாமிச மற்றும் தாவர உண்ணிகள் கணக்கெடுப்பு நடக்கிறது.
திருப்பூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தராவு ஆகிய பகுதிகளில் புலி, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் காணப்படுகிறது. இந்த வனப்பகுதியில் 34 சுற்றுகளாக வன விலங்கு கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது. 53 பாதைகளில் வன விலங்குகள் கணக்கெடுப்பு நடத்த வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
3 நாட்களுக்கு வனப்பகுதியில் காணப்படும் மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகள், அடுத்த 3 நாட்களுக்கு நேர்கோட்டு பாதையில் சென்று, திரும்பும்போது தாவர வகை கணக்கெடுக்கப்பட உள்ளது. இன்று கோடைகால புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியது. வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் 15 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபடுகின்றனர். கணக்கெடுப்பு குறித்து திருப்பூர் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் தலைமையில் கணக்கெடுப்பு குறித்து விளக்கப்பட்டது.