தென்னையை தாக்கும் வெள்ளை ஈ: கவலையில் விவசாயிகள்

உடுமலை சுற்றுப்பகுதியில், வேகமாக பரவி வரும் வெள்ளை ஈ தாக்குதலால், தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2022-01-20 02:00 GMT

வெள்ளை ஈ தாக்குதலுக்குள்ளான தென்னை. 

திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில், 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். பருவமழை முடிந்து, பனிக்காலம் துவங்கியுள்ள நிலையில், தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் துவங்கியுள்ளது; இதனால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தென்னை ஓலையின் அடிப்பகுதியில் தங்கும், வெள்ளை நிறத்திலான நுண்ணிய ஈக்கள், அவற்றின் சாற்றை உறிஞ்சி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இவை நுாற்றுக்கணக்கில் முட்டையிடுவதோடு, 30 நாட்களில் அபரிமிதமாக பெருகி, பச்சையத்தை உறிஞ்சி, ஓலையின் மீது பூஞ்சாணம் போல் படிந்து விடுகிறது. இதனால், தென்னை மரங்கள் ஒளிச்சேர்க்கை செய்ய வழியில்லாமல், மகசூலும், மரங்களும் பாதிக்கின்றன. ஓலைகள் பாதித்த நிலையில், தற்போது தென்னங்குருத்து மற்றும் பாலைகளும் பாதிக்கின்றன. குறிப்பாக, குட்டை ரக தென்னை மரங்கள், இளநீர் மரங்களிலும் அதிகளவு பாதிப்பு தென்படுகிறது. எனவே, வேளாண் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News