பஞ்சலிங்கம் அருவியில் தண்ணீர் இருக்கு... குளிப்பதற்கு சுற்றுலாப்பயணிகள் இல்லை!

திருப்பூர் மாவட்டம், உடுமலை பஞ்சலிங்கம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது; ஆனால், ஊரடங்கால் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Update: 2021-06-12 11:27 GMT

உடுமலைப்பேட்டை பஞ்சலிங்கம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே,  திருமூர்த்திமலையில் பிரச்சித்தி பெற்ற பஞ்சலிங்கம் அருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர், இந்த அருவில் கொட்டுகிறது. அருவில் குளிப்பதற்கு, திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வழக்கமாக வருவதுண்டு.

பொது ஊரடங்கு காரணமாக, மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிப்பதற்கும் தடை அமலில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், பஞ்சலிங்க அருவிக்கு தண்ணீர்  வரத்து அதிகரித்துள்ளது.

அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும், சுற்றுலா பயணிகளின் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வழக்கமாக இந்த நேரத்தில் சீசன் களை கட்டியிருக்கும். ஆனால், கொரோனாவின் கொடூர தாண்டவத்தால், எல்லாமே முடங்கிக் கிடக்கிறது என்பதே உண்மை.  

Tags:    

Similar News