உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 1,350 மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி

உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 1,350 மாணவ, மாணவியருக்கு இன்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2021-09-07 12:21 GMT
பைல் படம்.

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப்பின், கடந்த 1 ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு கல்லூரியில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அரசுக் கல்லூரியில் இளங்கலை முதுகலை பிரிவில் 2800 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கல்லூரியிலேயே இதுவரை ஆயிரத்து 350 மாணவ, மாணவியர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும், அருகில் உள்ள தாய் சேய் நல விடுதி செவிலியர்கள், மருத்துவர் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்துகின்றனர் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

Tags:    

Similar News