உடுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைப்பு
உடுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் நீர் நிரம்பி உள்ளன.
திருப்பூர் மாவட்டம் உடுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை, அமராவதி, கொழுமம் மற்றும் வந்தரவு வனப்பகுதிகளில் யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வறட்சி காலங்களில் வன விலங்குகள் தண்ணீர் குடிக்கும் வகையிலும், சின்னாறு ரோட்டை கடந்து அமராவதி அணைக்கு வன விலங்குகள் வரும். ரோட்டை கடக்கும்போது வாகனத்தில் வன விலங்குள் அடிப்பட்டு இறந்து விடும்.
இவற்றை தடுக்கும் வகையில், உடுமலை, அமராவதி வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 12 இடங்களில் போர்வெல் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. சோலார் மின் உற்பத்தி மூலம் மோட்டார் இயக்கப்பட்டு, தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகின்றன. மேலும், காட்டாறு, ஓடைகளில் குறுக்கே தடுப்பணைகள் உள்ளன. தற்போது சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உடுமலை வனச்சரக வனப்பகுதியில் ஈசல் திட்டு கிழக்கு மற்றும் கோம்பு மேற்கு பகுதியில் ரூ36 லட்சம் மதிப்பில் 3குடிநீர் தொட்டி கட்டும் பணி நடக்கிறது. ஏற்கனவே கட்டப்பட்ட குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பட்டுள்ளதால் வன விலங்குகள் தண்ணீர் குடித்து செல்கின்றன.