உடுமலை: விலைபோகாத தக்காளி... கொள்முதல் செய்த தோட்டக்கலைத்துறை...

உடுமலையில் விலைபோகாத தக்காளிகளை தோட்டக்கலைத்துறையே கொள்முதல் செய்ததால் விவசாயிகள் மகிழ்ச் அடைந்தனர்.

Update: 2021-05-30 05:53 GMT

தக்காளி

உடுமலை சுற்று வட்டாரத்தில் தாக்காளி சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளி திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக தக்காளி அனுப்ப முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், விவசாய நிலங்களில் அப்படியே விட்டுவிட்டனர்.

உடுமலை பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில், தோட்டக்கலை துறை சார்பில், ஆனைமலை பகுதியில் வீடுகளுக்கு விநியோகம் செய்யும் வகையில் 155 வண்டிகளுக்கு தேவையான 200 பெட்டி தக்காளி கொள்முதல் செய்துள்ளனர். இதனால் உடுமலைப்பேட்டை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், உடுமலை சுற்று வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு தக்காளி அனுப்பி வைக்கப்பட்டது. தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக தக்காளி கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பல விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த தக்காளி அறுவடை செய்யாமல் வயல்களிலேயே விட்டனர். இந்நிலையில் தோட்டக்கலை துறை சார்பில் 200 பெட்டி கொள்முதல் செய்தது மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்கு தேவையான தக்காளியை, தோட்டக்கலை துறை மூலம் இங்கு கொள்முதல் செய்தால் விவசாயிகள் பயன்பெறுவர், என்றனர்.

Tags:    

Similar News