ரயில்வே தரைமட்ட பாலத்தில் தேங்கும் தண்ணீரால் அவதி

உடுமலை பகுதியில் உள்ள ரயில்வே தரை மட்ட பாலங்களில் மழை நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

Update: 2021-10-05 12:43 GMT

பெரியகோட்டை பிரிவில் இருந்து மருள்பட்டி செல்லும் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

திண்டுக்கல்–பாலக்காடு அகல ரயில்பாதையில், கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சில இடங்களில் தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. மழை காலங்களில், தரைமட்ட பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மழை நீரை வெளியேற்ற கட்டமைப்பு வசதி இல்லாததால், பல நாட்களுக்கு மழை நீர் அங்கே தேங்கி நிற்கிறது. தற்போது பெரியகோட்டை பிரிவில் இருந்து மருள்பட்டி செல்லும் தரைப்பாலத்தில் பல நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதேபோல், பாலப்பம்பட்டி, பழனியாண்டவர் நகர், பூலாங்கிணறு, அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாலங்களிலும் இதபோல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால், தரைமட்ட பாலங்களில் தண்ணீர் தேங்குவதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Tags:    

Similar News