ஆர்.வேலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக., அதிமுக மனு தாக்கல்
ஆர்.வேலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக., அதிமுக சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.;
உடுமலை ஊராட்சி ஒன்றியம் ஆர்.வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான மனுக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெறப்படுகிறது. திமுக., சார்பில் கலாமணி வெங்கடேஷ், தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்தார். உடன், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ., ஜெயராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். இதேபோல், அதிமுக., சார்பில் ஜெ.அன்னலட்சுமி ஜெயகிருஷ்ணன், தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்தார். மடத்துக்குளம் எம்எல்ஏ., மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.