அமணலிங்கேஸ்வரர் கோவிலை மூழ்கடித்த பஞ்சலிங்க அருவி
பஞ்சலிங்க அருவி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்வதால் அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.;
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் கனமழை பெய்ய துவங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. இதற்கிடையே, உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பஞ்சலிங்க அருவில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளப்பெருக்கால் அமணலிங்கேஸ்வரர் கோவில் பகுதி மற்றும் விநாயகர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் பாலத்தை கடந்து வெள்ளம் சென்று கொண்டு இருப்பதால் அப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது.