அடிப்படை வசதியின்றி அவதிக்குள்ளாகிவரும் மலைவாழ் கிராம மக்கள்
உடுமலை வனச்சரகத்தை சேர்ந்த குழிப்பட்டி மலைவாழ் கிராமத்தினர் அடிப்படை வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.;
திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச்சரகத்தை சேர்ந்த குழிப்பட்டி மலைவாழ் மக்கள் 50 குடும்பத்தினர் கடந்த 1972 ல் திருமூர்த்தி அணைப்பகுதிக்கு குடிப்பெயர்ந்தனர்.
இவர்களுக்கு திருமூர்த்தி அணை படகுத்துறை எதிரில் அரசு சார்பில் கடந்த 1984 ல் 120 வீடுகள் கட்டித்தரப்பட்டன. இந்த குடியிருப்பு பகுதிக்கு எவ்வித அடிப்படை வசதி இல்லாததால் பொது மக்கள் பல்வேறு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
தாழ்வான பகுதியில் குடியிருப்பு அமைந்துள்ளதால் மழை காலத்தில் குடியிருக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறது. குடியிருப்பை சுற்றிலும் மண் அரிப்பு ஏற்படுகிறது.
என குடியிருப்பு பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.