உடுமலையில் தீயணைப்புத் துறை சார்பில் தீ தடுப்பு செயல் விளக்கம்

உடுமலையில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

Update: 2021-09-02 12:39 GMT

உடுமலை தீயணைப்பு துறை சார்பில் தனியார் காற்றாலையில் தீ தடுப்பு செயல் விளக்கம் நடந்தது.

உடுமலை சுற்று வட்டாரத்தில் ஏராளமான தனியார் காற்றாலைகள் செயல்படுகிறது. சமீபத்தில் ஒரு காற்றாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு மின் விசிறிகள் எரிந்து சேதமடைந்தது. இதன் காரணமாக உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் செயல்படும் தனியார் காற்றாலை நிறுவனத்தில் உடுமலை தீயணைப்பு துறை நிலை அதிகாரி ஹரி ராமகிருஷ்ணன் தலைமையில் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தீ தடுப்பு ஒத்திகை செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில், தீ விபத்து ஏற்பட்டால், தீயை எவ்வாறு அணைக்க வேண்டும். மின் கசிவு ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News