உடுமலை அருகே புக்குளம் அடுக்குமாடி குடியிருப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு
புக்குளத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி சார்பில் அறிவிப்பு.;
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத்தால், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் உடுமலை அருகே உள்ள புக்குளத்தில் 320 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. இந்த வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதால், உடுமலை நகராட்சி எல்லையில் வசிக்கும் பொதுமக்கள், குடும்பதலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகர், வங்கி இருப்பு கையேடு நகல், குடும்பத் தலைவரின் போட்டோ ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். பயனாளிகள் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். இத்திட்டத்திற்கான பயனாளிகள் பங்களிப்புத் தொகை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 700 ரூபாய் வாரியத்திற்கு முன்பணமாக செலுத்த வேண்டும். குடும்பத்தினருக்கு சொந்த வீடு, நிலம் இல்லை என அரசு வழங்கும் குடியிருப்பை விற்கவோ அல்லது குத்தைக்கு விடமாட்டேன் என்ற உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை நாளை 15 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நகராட்சி அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.