உடுமலை இடைத்தேர்தல்: புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு
உடுமலை இடைத்தேர்தல் தொடர்பாக புகார்களை 95663-88446 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.;
உடுமலையில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் அக்.,6 மற்றும் அக்.,9ம் தேதி நடக்கிறது. இத்தேர்தல் உடுமலை ஒன்றியத்திலும், குடிமங்கலம் ஒன்றியத்திலும் நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இடங்களில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாக புகார் எழுந்து உள்ளன. இதையடுத்து தேர்தல் விதிமுறைகள் கண்காணிக்க திருப்பூர் மாவட்ட மேற்பார்வையாளர் ஐஏஎஸ் அதிகாரி சிவசண்முகராஜா நியமிக்கப்பட்டு உள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் இடங்களில் நடத்தை விதிகள் மீறப்பட்டால், அது தொடர்பான புகார்களை 9566388446 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.