அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2021-07-12 14:17 GMT

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்டதண்ணீர் வாய்க்காலில் செல்கிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54, ஆயிரத்து 637, ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வாய்க்கால் கரையோரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக அணையில் மொத்தம் 90, அடியில் தற்போது 64, அடி தண்ணீர் உள்ளது. 821,கன அடி தண்ணீர் வருகிறது.

இந்த நிலையில், அணையில் தேவையான நீர் இருப்பு  உள்ளதால்,  முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என ராமகுளம், கல்லாபுரம்  விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர்,  தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், 2, ஆயிரத்து 834, ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், அமராவதி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நவம்பர் 24, ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தண்ணீர் திறப்பால் உடுமலை சுற்று வட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News