உடுமலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

பாஜகவில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்தும் உறுப்பினர் கார்டு வழங்கியும் மரியாதை செய்யப்பட்டது

Update: 2023-05-07 12:15 GMT

உடுமலைப்பேட்டையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஏ. வடுகநாதன், நகரப் பொதுச் செயலாளர்கள் ஏ சீனிவாசன், எம் தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், உடுமலை ஏரிப்பாளையம் பகுதியில் இருந்து ரவிக்குமார், செந்தில்குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட  பல்வேறு கட்சியைச் சார்ந்த இளைஞர்கள், பாரதிய ஜனதாவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களுக்கு சால்வை அணிவித்தும் உறுப்பினர் கார்டு வழங்கியும் மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், ரவிக்குமார் , செந்தில் குமார், ரஞ்சித்குமார், ஸ்ரீதர், விமல் , மதியழகன், ஞானசேகர் , சந்தோஷ், குமார், வீரமணி, அலெக்ஸ் விஜய், பிரபாகரன், சூரிய பிரகாஷ், மணிகண்டன், முருகேசன், ரத்தினகுமார், கருப்புசாமி, கார்த்தி, சதஸ்வி, தங்கவேல், மோகன்நாதன் ஆகியோர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிறைவாக துணைத் தலைவர் உமா குப்புசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags:    

Similar News