வாழையில் தேமல் நோயை கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை
வாழைப்பயிரில் தேமல் நோய் தாக்கி வருவதால் விவசாயிகளுக்குமகசூல் இழப்பு ஏற்பட்டு வருகின்றது.
தேமல் நோயில் இருந்து வாழை மரத்தை பாதுகாக்க, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுப்பகுதி கிராமங்களில், தென்னை, நெல், கரும்பு, மக்காச்சோளம், சோளம் என, தானியப் பயிர்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. அமராவதி உள்ளிட்ட சில பகுதி களில், இறவை பாசனத் தில், வாழை சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, இலை அறுவடை செய்வதற்கான வாழை ரகமும் அதிகம் காணப்படுகிறது.
இந்த வாழை இலைகள், கேரள மாநிலம், கோவை, திருப்பூர் என மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப் படுகிறது. ஆனால், வாழையை தேமல் நோயால், தாக்கும் மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகின்றது.இதனை கட்டுப்படுத் தும் வழிமுறை குறித்து தோட்டக்கலை அதிகாரிகள், விவசாயிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.
தோட்டக்கலை துறையினர் கூறியதாவது: வாழையின் அடிப்பகுதி மற்றும் அதன் மைய நரம்பு இலைகளில் சுழல் வடிவ 'பிங்க்' கலந்த சிவப்பு நிற காணப்படும். மஞ்சரி காம்புகளிலும் கோடுகள் காணப்படும். இந்த வைரஸ் அசுவினி பூச்சி, பாதிக்கப்பட்ட உறிஞ்சிகள் வாயிலாக களைகளை நீக்கி, நிலப் பரப்பை சுத்தமாக பராம ரிக்க வேண்டும். நோய் பாதிக்கப்பட்ட வாழை கன்றுகளை கண்டறிந்து அழிக்க வேண்டும். பரிந்துரை அடிப்படையில், மருந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.