உடுமலை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
உடுமலை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த மோகன்குமார், மஜீத் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1,150 ரூபாய் பணமும் பறிமுதல் செய்தனர்.