திருப்பூர் மாநகராட்சியில் 4920 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது
திருப்பூர் மாநகராட்சியில், 4920 கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.;
திருப்பூர் மாவட்டத்தில் இன்று கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. திருப்பூர் மாநகராட்சியில் 17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், 4 ஆயிரத்து 920 கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
1.அண்ணா நெசவாளர் காலனி –230
2.குருவாயூரப்பன் நகர்–220
3.கோவில்வழி–230
4.எல்ஆர்ஜி நியூ ராமகிருஷ்ணாபுரம்–150
5.மேட்டுப்பாளையம்–230
6.நெருப்பெரிச்சல்–410
7.நெசவாளர் காலனி–230
8.பிஆர்எம் கோம்–230
9.பெரியாண்டிபாளையம்–450
10.சூசையாபுரம்–200
11.சுண்டமேடு–210
12.டி.மண்ணரை–150
13.டிஎஸ்கே காலனி–410
14.தென்னம்பாளையம் கேவிஆர் நகர்–420
15.வீரபாண்டி–330
16.15வேலம்பாளையம்–350
17.நல்லூர்–470