திருப்பூரில் விதிமீறி செயல்பட்ட நிறுவனங்கள், கடைகளுக்கு 'சீல்'

திருப்பூர் வீரபாண்டி பகுதியில், விதிமீறி செயல்பட்ட நிறுவனங்கள், கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

Update: 2021-06-04 15:48 GMT

திருப்பூர்  மாநகராட்சி வீரபாண்டி பகுதிகளில், தொழில் நிறுவனங்கள் விதிமுறை மீறி இயங்குவதாக வருவாய் துறையினருக்கு புகார் சென்றது. அதன்பேரில் திருப்பூர் ஆர்டிஓ ஜெகநாதன் மற்றும் தெற்கு தாசில்தார் சுந்தரம் ஆகியோர்,  வீரபாண்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, வீரபாண்டி - இடுவம்பாளையம் ரோட்டில் பனியன் தொழிற்சாலை ஒன்று, விதிமுறைமீறி அனுமதியின்றி இயங்குவது  தெரியவந்தது. அந்நிறுவனத்தை மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி முன்னிலையில், அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அதேபோல், கரும்வம்பாளையத்தில் இயங்கிய நகைப்பட்டறை, பாலாஜி நகர் இரண்டாவது நகரில் இயங்கிய பனியன் கம்பெனி ஆகியனவும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

மேலும், வேறுசில நிறுவனங்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் பால் விற்பதாகக்கூறி, காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடையை சுகாதாரத்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

Tags:    

Similar News