திருப்பூர்: தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றக்கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றக் கோரி திருப்பூரில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-07-28 13:00 GMT

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, திருப்பூரில் முன்னாள் சபாநாயகர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.

தமிழக சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் வாக்குறுதிகளாக, பெட்ரோல் விலை ரூ.5 குறைக்கப்படும், குடும்ப பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும், அங்கன்வாடி பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பது  உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அளித்திருந்தது.

இவற்றில் ஒருசில வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றப்பட்டு, மற்ற வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியான அதிமுக குற்றம்சாட்டி வருகிறது. மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அதிமுக.,சார்பில் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

அவ்வகையில், ந்திருப்பூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில்  நடந்த ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் அதிமுக  பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News