கொரோனா பரவலை கட்டுப்படுத்த 33 இடங்களில் 5 ஆயிரம் கடைகள் அடைப்பு

திருப்பூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 33 இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது.

Update: 2021-08-07 06:51 GMT

திருப்பூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும், 3 வது அலை பரவல் முன் எச்சரிக்கையாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவக்கூடியதாக உள்ள இடங்களில், சனி மற்றும் ஞாயிறு கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர பகுதியில் புதுமார்க்கெட், கடை வீதி உள்பட 33 இடங்களும், பல்லடம் 1, தாராபுரம், உடுமலைப்பேட்டையில் தலா 6 என மொத்தம் 46 இடங்களில் இடங்கள் கண்டறியப்பட்டு கடைகளை அடைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி திருப்பூரில் 33 இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இன்று காலை அடைக்கப்பட்டது. மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டது. திருப்பூரில் 33 இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அடைப்பால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.


Tags:    

Similar News