தீபாவளிக்கு திருப்பூரில் இருந்து 2 லட்சம் பேர் வெளியூர் பயணம்

திருப்பூரில் இருந்து தீபாவளிக்கு 2 லட்சம் பேர் வெளியூர் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

Update: 2021-11-04 09:39 GMT

திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியூர் செல்லும் பொது மக்கள்

திருப்பூரில் இருந்து தீபாவளி பண்டிகைக்காக 2 லட்சம் மக்கள் அரசு பஸ்கள் மூலம் பயணம் செய்து உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.

திருப்பூர் மாநகர் சுற்று வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான பனியன், ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படுகிறது. இந்த நிறுவனங்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. பண்டிகை முன்னிட்டு, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக தங்கள் சொந்த ஊருக்கு பஸ்கள் மற்றும் ரயில்கள் மூலம் செல்கின்றனர். இதில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில்,திருநெல்வேலி, தேனி, மதுரை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை வரை அரசு பஸ்கள் மூலம் 2 லட்சம் பேர் பஸ்கள் மூலம் பயணம் மேற்கொண்டு உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News