திருப்பூர் மாநகராட்சியில் நாளை குடிநீர் நிறுத்தம்
திருப்பூர் மாநகராட்சியில் நாளை குடிநீர் நிறுத்தம் செய்யப்படுமென மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது
திருப்பூர் மாநகராட்சியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார்பாடி வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் விநியோகம் செய்யும் மூன்றாவது குடிநீர் திட்டம் என்டிஎடிசிஎல், பவானியில் உள்ள தலைமை நிலையத்தில், நாளை பராமரிப்பு பணிக்காக சுமார் 4 மணி நேரத்திற்கு மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக மாநகராட்சியில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். மேலும், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் குடிநீர் விநியோகம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.