போக்சோ பிரிவில் பொய் புகார் புகார் அளித்தவர் மீது வழக்கு
போக்சோ பிரிவில் பொய் புகார் அளித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.;
திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த நபர் மீது முன் விரோதம் காரணமாக, தனது சகோதரியின் குழந்தையை வைத்து கடந்த 2020 ம் ஆண்டு பொய்யான போக்சோ புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி சுகந்தி, விசாரித்தார். விசாரணையில், பொய் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பொய் புகார் அளித்த சங்கர் மீது, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 22 ன் படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கடந்த 2012 ம் ஆண்டில் இருந்து போக்சோ புகார் தெரிவித்தவர் மீது, முதன் முறையாக வழக்குப்பதிவு செய்ய திருப்பூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.