திருப்பூரில் போக்குவரத்து நிறைந்த சாலையில் கார் தீப்பிடித்து சாம்பல்

திருப்பூரில், பரபரப்பான சாலையில் கார் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.;

Update: 2022-02-18 11:30 GMT

திருப்பூர் பல்லடம் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், ஆல்டோ காரில் பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தார். வித்யாலயம் பகுதி  அருகே கார் வந்தபோது, காரில் இருந்து சத்தம் கேட்டது. இதனால் காரை விட்டுகீழே இறங்கிய சந்திரசேகர், காரை சோதனை செய்தார்.

அப்போது, திடீரென   கார் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள்,  சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் கார் முழுவதும் எரிந்தது. இருப்பினும் எரிந்துக்கொண்டிருந்த காரை அணைத்தனர். கார் பெட்ரோல் மற்றும் காஸ் ஆகிய இரண்டு இணைப்புகள் மூலம் ஓடியது. இதில், ஏதேனும் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என தெரிகிறது. வீரப்பாண்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News