திருப்பூரில் 5 லட்சம் மதிப்பு 40 செல்போன் மீட்டு ஒப்படைப்பு
திருப்பூர் மாவட்டத்தில் திருட்டுப்போன காணாமல் போன 40 செல்போன் மீட்டு ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் செல்போன் திருட்டுப் போனாலோ அல்லது காணாமல் போனால் சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்ய எஸ்பி., சசாங்சாய் தெரிவித்துள்ளார். மேலும், திருட்டுப்போன மற்றும் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்க 2 தனிப்படையில் கண்காணிக்கப்பட்டது. கடந்த 2 மாதமாக திருட்டுப்போன மற்றும் காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எஸ்பி., அலுவலகத்தில் நடந்தது. மாவட்டம் முழுவதும் 5 லட்சம் மதிப்பிலான 40 செல்போன்கள் மீட்கப்பட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.