வாடகை கார்களுக்கு அபராதம்
பல்லடத்தில் தேவையின்றி சுற்றித்திரிந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
பல்லடம்,மே 16தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கான இன்று, பல்லடத்தில் முக்கிய நெடுஞ்சாலைகளில் தடுப்பு அமைத்து போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கோவை–திருச்சி ரோட்டில் போலீஸார் சோதனை ஈடுபட்டபோது, 10 வாடகை கார் மற்றும் 30 இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அனுமதியின்றி வெளியில் சுற்ற கூடாது என போலீஸார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.