பல்லடம் பகுதியில் சாராயம், கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
பல்லடம் பகுதியில் சாராயம், கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.;
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் சாராயம், கஞ்சா வைத்திருப்பதாக பல்லடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீஸார் மாணிக்காபுரம் பகுதியில் சோதனை செய்தனர்.
பெருமாள்,42, என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டில் ஒரு லிட்டர் சாராயம், 2 லிட்டர் ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்த சாராயம், ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் செட்டிபாளையம் பகுதியில் வீட்டில் 2 கஞ்சா செடி வளர்த்த சக்திவேல்,22, என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.