புதிய கட்டுப்பாடு:பல்லடத்தில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

பல்லடம் முக்கிய பகுதியில் ஊரடங்கு சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என ட்ரோன் கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டது.;

Update: 2021-05-15 12:53 GMT

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த சில விதிமுறை தளர்வுகளுடன் கடந்த 10 ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. விதிமுறை தளர்வால், பொது மக்கள் அதிகளவில் வெளியில் நடமாடினர்.

இன்று முதல் புதிய விதிமுறைகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடைகள் காலை 6 மணி முதல் 10 வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு பிறகு, விதிமுறை மீறப்படுகிறதா என ட்ரோன் கேமிரா மூலம் பல்லடம் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பல்லடம் பஸ் ஸ்டாண்டு, மங்கலம் ரோடு, கோவை, திருப்பூர் நெடுஞ்சாலைகளை ட்ரோன் கேமிரா மூலம் போலீஸார் கண்காணித்தனர்.

Tags:    

Similar News