சாலையில் நடந்த சம்பவம் - பதறிப்போன பொதுமக்கள்: எல்லாம் இதற்காகத்தான்!
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பஸ் ஸ்டாண்டு முன், சாலை பாதுகாப்பு நாடகம் மற்றும் விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் போது காரும், டூ வீலரும் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் 2 பேர் ரத்த வெள்ளத்தில் பலியானது போல் நடித்துக் காட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது ஒருவர் ஹெல்மெட்டுடன் சென்று,ஹெல்மெட் அணியுங்கள்,ஹெல்மெட் அணியாமல் வந்ததால் தான் இவர்கள் 2 பேர் இறந்து விட்டனர் என விழிப்புணர்வு கருத்துகளை கூறினார்.
எனினும், விபத்து விழிப்புணர்வு என்பதை அறியால், சிலர் பதற்றமுடன் அங்கு வந்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம் என்பது தெரிந்தபிறகு பொது மக்கள் நிம்மதியுடன் சென்றனர். நாடகத்துக்கான ஏற்பாடுகளை டிஎஸ்பி வெற்றிச்செல்வன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீஸா் செய்து இருந்தனர்.