விசைத்தறியாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வரும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து, நாளை காரணம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Update: 2022-01-23 06:00 GMT

விசைத்தறி பட்டறை.

திருப்பூர், கோவை மாவட்டங்களில், விவசாய தொழிலுக்கு அடுத்த நிலையில் விசைத்தறி தொழில் உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாமல் விசைத்தறியாளர்கள் தவித்து வரும் நிலையில், கூலி உயர்வை அமல்படுத்த கோரி அமைச்சர்கள், ஆட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தியும், அதை நடைமுறைப்படுத்தாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இதன் காரணமாக விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நடந்துவரும் பேச்சுவார்த்தை, தோல்வியடைந்து வருகிறது. கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வரும் ஜவுளி உற்பத்தியாளர்களின் நடவடிக்கையை கண்டித்து, நாளை 24ம் தேதி காலை காரணம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி உள்ளிட்ட பல அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News